Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவருதான் சிறப்பா ஆட்சி செய்றாறாம்! சொல்லிட்டாங்க!

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான கடந்த 1ம் தேதி தமிழகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆனாலும் இதற்கு முன்பாக தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று எந்த விதமான ஆடம்பரமும் செய்ய வேண்டாம் என்றும், ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரியுங்கள் என்றும், தெரிவித்திருந்தார். மேலும் பெரிய அளவில் ஆடம்பரம் செய்யக்கூடாது என்றும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அன்பு கட்டளையிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்வாறான சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சேகர்பாபு ஏற்பாட்டில் மனிதநேய திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புரசைவாக்கம் தெருவில் நேற்று புகழாரம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன், நடிகர்கள் மயில்சாமி, ராஜன், எம்.எஸ். பாஸ்கர், நடிகை ரோஜா, சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், ஆந்திர மாநில சட்ட சபை உறுப்பினருமான ரோஜா தெரிவித்ததாவது, சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தத் துறைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று காட்டியிருக்கின்றார்.

6 மாதத்தில் 5000 கோடி சொத்துக்களை மீட்டு கொடுத்திருக்கின்றார் முதல்வர் ஸ்டாலின் மிக சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். நான் அவரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தேன் அவரும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார். நாள்தோறும் சுறுசுறுப்பாக இயங்கி மக்கள்பணியாற்றுகிறார் அவரை முதலமைச்சராக பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம் அண்ணா ஆட்சி தான் 50 வருடங்களாக தொடர்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் ஸ்டாலின் நாடுமுழுவதும் தகவல்களை சேகரித்து நாள்தோறும் சுறுசுறுப்பாக இயங்குவதை காணும்போது அடுத்த 30 வருடங்களுக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். பொதுமக்களுக்கு இன்னும் அனேக நன்மைகளை செய்வார் நான் ஒரு பெண்ணாக பிறந்ததை பெருமையாக நினைக்கின்றேன்.

பெண்கள் தற்சமயம் ஆண்களுக்கு இணையாக விளையாட்டு, தொழில் மற்றும் படிப்பில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள் வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் இருக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதனைகள் செய்து வெற்றி பெற வேண்டும் என்று உரையாற்றி இருக்கிறார் நடிகை ரோஜா.

Exit mobile version