Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இசை இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவின் புகைப்படம் புறக்கணிப்பு! பிரபல இயக்குனர் விரக்தி!

Rolling stone magazine ignores lyricist arivu photo

Rolling stone magazine ignores lyricist arivu photo

இசை இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவின் புகைப்படம் புறக்கணிப்பு! பிரபல இயக்குனர் விரக்தி!

உலகின் பிரபலமான இசை நாளிதழ்களில் ரோலிங் ஸ்டோன் நாளிதழும் ஒன்று.இந்த இதழ் அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழாகும்.இந்த இதழின் இந்திய பதிப்பில் சமீபத்தில் அட்டைப்படத்தில் தமிழ் பாடகி தீ புகைப்படமும் பாடகர் ஷான் வின்சென்ட் டீ பால் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

இந்த நாளிதழில் இவர்களுடன் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெறவில்லை.அறிவு என்ஜாயி எஞ்சாமி பாடலில் பாடகி தீயுடன் இணைந்து இந்த பாடலை பாடியிருப்பார்.மேலும் இவர் இந்த பாடலுக்கு வரிகளும் எழுதியிருப்பார்.இந்த பாடல் குறைந்த காலக்கட்டத்திலேயே பல பார்வையளர்களை பெற்றது.மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனையடுத்து சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற நீயே ஒளி பாடலுக்கும் இவர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.இந்த பாடலை ஷான் வின்சென்ட் டீ பாலுடன் இணைந்து இவர் எழுதியிருப்பார்.இவரின் தமிழ் வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும்.மேலும் ஆங்கில வரிகளை ஷான் வின்சென்ட் டீ பால் எழுதியிருப்பார்.இந்த பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.அறிவு ராப்,ஒப்பாரி,கானா போன்ற பல வகையான பாடல்களை பாடுவதில் வல்லவர்.

இதனிடையே தெருக்குரல் அறிவின் புகைப்படம் ரோலிங் ஸ்டோன் நாளிதழில் இடம்பெறாதது பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.இது குறித்து பிரபல தமிழ் சினிமா இயக்குனரான பா.ரஞ்சித் அந்த நாளிதழில் ஏன் அறிவின் புகைப்படம் வெளியாகவில்லை என்று தெரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.மீண்டும் ஒருமுறை அறிவு மறைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த கேள்வி தமிழ் சினிமாக் கலைஞர்களை யோசிக்க வைத்துள்ளது.

Exit mobile version