Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலிவுட் முன்னணி ஹீரோவின் மகனுடன் ரொமான்ஸ்!! சாய் பல்லவிக்கு ரசிகர்கள் வாழ்த்து!

#image_title

பாலிவுட் முன்னணி ஹீரோவின் மகனுடன் ரொமான்ஸ்!! சாய் பல்லவிக்கு ரசிகர்கள் வாழ்த்து!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி.இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.இதுவரை இவர் நடித்த படங்களில் கிளாமர்,முத்த காட்சிகள் இடம் பெற்றதில்லை.இதன் காரணமாக பல ரசிகர்களின் இதயத்தை வென்ற நடிகையாக உள்ளார்.

இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சாய் பல்லவி தற்பொழுது பாலிவுட் கால் எடுத்து வைக்க உள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தமிழில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வரும் ஜுனைத் கான் இந்த படத்திற்கு பிறகு JRF Film தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை சாய் பல்லவியுடன் நடிக்க இருக்கிறார்.இப்படம் காதல் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.31 வயதாகும் சாய் பல்லவி தன்னைவிட ஒரு வயது சிறிய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழ்,தெலுங்கு,மலையாளத்தை தொடர்ந்து ஹிந்தியில் முன்னணி நடிகையாக வர வேண்டுமென்று அவரது ரசிகர்கள் தற்பொழுது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version