Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீரியல்தான்  தமிழ் மக்களிடம் நல்ல  வரவேற்ப்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளின் டிஆர்பியை எகிற  வைப்பதும் இந்த சீரியல்கள் தான் என்றே கூறலாம்.

அவ்வாறு இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படத்தின் ஜெராக்ஸ் தான்  இந்தப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

லாக் டவுன் முடிந்தபிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலை தவிர ஓடிய எந்த சீரியலும் மக்களிடையே அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதற்கு முக்கியமான காரணம் கதிர் மற்றும் முல்லையின் காதல் கதையே.

திடீரென சித்ரா தன்னுடைய திருமணத்தை பற்றி யோசித்து இந்த ஊரடங்கு சமயத்திலேயே நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டார். விரைவில் அவருக்கு திருமணமும் ஆக போகிறதாம்.

தற்போது தன்னுடைய கணவரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் விதமாக ரொமான்டிக் போட்டோசை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் சித்ரா VJ.

Exit mobile version