சபரிமலையில் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாக இந்த ரோப் வே திட்டம் அமைய இருக்கிறது. இதற்கு மத்திய அரசு பரிவேஷ் போர்ட்டின் மூலம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வனத்துறை, தேவசம்போர்டு, வருவாய்த்துறை ஆகியவை நில அளவீடு செய்து முடிவெடுத்துள்ளன. இதன் மூலம், 4.67 எக்டேர் வனப்பரப்பு வழங்குவதை மாற்றி, கொல்லம் மாவட்டம் செந்தூரணியில் மாற்று நிலம் வழங்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டில் இந்த திட்டம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டம் தொடர்பான தகவல்கள் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளியிடப்பட வேண்டியது அவசியம். தற்பொழுது சபரிமலையில் இந்த ரோப் வே திட்டத்தின் பணிகளானது மிகத் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குனரும், ரான்னி வன அதிகாரியும் இணைந்து பம்பை ஹில்டாப் முதல் சன்னிதானம் வரை உள்ள ரோப்வே பாதையை கடந்து செல்லும் காட்டுப் பகுதியை ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வு பின்னர் முதல்வரின் தலைமையிலான கமிட்டி முன் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கான மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், மகரஜோதி முடிந்த சில நாட்களில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், 2.7 கிலோமீட்டர் தூரம் கடக்கின்றது, இதில் 60 மீட்டர் உயரமுள்ள ஐந்து தூண்கள் அமைக்கப்படும். இதற்காக 80 மரங்களை வெட்ட வேண்டும். 10 நிமிடங்களில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியும், இதற்கான 40 முதல் 60 கேபிள் கார்கள் பயன்படுத்தப்படுவன. முதற்கட்டத்தில், இந்த ரோப் வே பொருள்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கொண்டு மிக முக்கியமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.