முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

0
247
#image_title

முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

இன்று 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலானோர் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.இதனால் உடல் அழகு கெடும் சூழல் உருவாகி விடுகிறது.இழந்த இளமையை முழுமையாக மீட்டெடுக்க ரோஜா இதழ் பொடியில் சோப் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*ரோஜா இதழ் பொடி – 3 தேக்கரண்டி
*சோப் பேஸ் – 1 கப்
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
*சோப் மோல்ட் – 1
*ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி

சோப் தயாரிக்கும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து சோப் பேஸ் சேர்க்கவும்.அதாவது டபுள் பாய்லிங் முறைப்படி சோப் பேஸை கொதிக்க வைக்க வேண்டும்.

சோப் பேஸ் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.பிறகு அதில் 3 தேக்கரண்டி ரோஜா இதழ் பொடி,2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் ஒரு சோப் மோல்டில் ஊற்றிக் கொள்ளவும்.

இதை ப்ரிட்ஜில் ப்ரீஸரில் 3 மணி நேரம் வைக்கவும்.பிறகு ஒரு நாள் முழுவதும் வெளியில் வைத்து பின்னர் ரோஜா சோப்பை உடலுக்கு பயன்படுத்தவும்.இந்த சோப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மேனி மிகவும் சாஃப்டாக மாறும்.