Rose Plant Growing Tips in Tamil: உங்கள் தோட்டத்தில் ரோஜாப்பூ கொத்து கொத்தாக வளர அதை ட்ரை பண்ணுங்க..!

0
283
#image_title

Rose Plant Growing Tips in Tamil: பூக்கள் என்றாலே அழகு தான். பூக்களை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து அதில் குறைந்தபட்சம் ஒரு ரோஜா செடியாவது வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஒரு சிலர் தொட்டியில் ரோஜா செடி வளர்த்து அதை மாடியில் வைத்து அழகு பார்ப்பார்கள். நம் வீட்டில் வைத்த ரோஜாப் பூ செடிகள் வளர்ந்தால் அதனை பார்ப்பதற்கு மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிக முறை நம் வீட்டில் வைக்கும் ரோஜா செடிகள் எப்படி வைத்துள்ளமோ அதே போன்று தான் இருக்கும். ஒரு பூக்கள் கூட பூக்காது, நாம் இந்த பதிவில் ரோஜா செடிகள் கொத்து கொத்தாக பூப்பதற்கு (Rose cultivation in Tamil) என்ன வழிகள் என்று பார்க்கலாம்.

மண் கலவை தேர்வு செய்தல்

  • முதலில் ரோஜா செடி வளர்ப்பிற்கு மண் வளம் முக்கியமான ஒன்று. நாம் ரோஜா செடிகளை நர்சரியில் இருந்து வாங்கி வந்த அதே மண்ணில் அப்படியே வைக்க கூடாது. அந்த பாக்கெட்டை பிரித்த பிறகு தான் வைக்க வேண்டும். நர்சரியில் இருந்து வாங்கி வந்த அதே மண் கலவை கிடைத்தால் மிகவும் நல்லது.
  • ஒரு வேளை நம் வீட்டில் உள்ள மண் கலவை வேறாக உள்ள பட்சத்தில் நீங்கள் செடியில் உள்ள மண் கலவையை நீக்கிவிட்டு வைக்க வேண்டும். வீட்டில் மண் மற்றும் இயற்கை உரத்தை பயன்படுத்தி இரண்டையும் கலந்து மண் கலவையை தயார் செய்ய வேண்டும்.

உரம் தேர்வு செய்தல்

  • ரோஜா செடிக்கு அதிக அளவு பாெட்டாசியம், கால்சியம் தேவைப்படுவதால் முட்டை தோல், டீ வடிக்கட்டிய டீ தூள், வாழைப்பழ தோல், வெங்காய தோல், காய்கறிகளின் கழிவு போன்றவற்றை ரோஜா செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.
  • செயற்கைகயாக கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல், இயற்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெய், பூண்டு தோல் சேர்த்து நன்றாக அரைத்து அதனை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு செடிகளின் மீது தெளிக்க வேண்டும். பூச்சிகள் வரமால் தடுக்க இது உதவும்.
  • மேலும் இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து மாவில் சிறிதளவு எடுத்து செடிகளுக்கு ஒரு ஸ்பூன் அளவு விட்டு வந்தால் மொட்டுகள் அதிகமாக வளரும்.

தண்ணீர் அளவு

ரோஜா செடிகளுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. ஒரு அளவு மண்ணில் ஈரப்பதம் இருந்தால் போதும். அதே சமயம் மண் வறண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் செடிகளுக்கு அதிக அளவு தண்ணீர் ஊற்றினால், அது அழுகிவிடும். செடியின் மேல் எப்போதும் நீர் ஊற்ற கூடாது.

சூரிய ஒளி

ரோஜா செடிகளுக்கு சூரிய ஒளி அவசியம். எனவே செடிகள் குறைந்தது 6-லிருந்து 8 மணி நேரமாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும். நிழலில் வைத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிப்படையும்.

பொதுவான டிப்ஸ்

  • மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் ஒரு ரோஜா செடியின் வளர்ச்சிக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்றாகும். செடி வளர்ந்து பூச்சி தாக்கப்பட்டால் செடிகளின் மீது வேப்ப எண்ணெய்யை தெளிக்க வேண்டும். ஒரு வேளை பூக்கள் பூச்சியால் பாதிக்கப்பட்டால் அந்த பூக்களை உடனடியாக அகற்றி விட வேண்டும்.
  • மேலும் ரோஜா செடிகளை அருகருகே வைக்க கூடாது. சிறிது இடைவெளி விட்டு தான் வைக்க வேண்டும். காற்றோட்டம் கட்டயாம் செடிகளுக்கு தேவைப்படும் என்பதால் இடைவெளி தேவை.
  • ரோஜா செடிகளை தொட்டியில் வளர்க்கலாம். தரையில் வளர்ப்பதை விட தொட்டியில் வளர்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க: ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?