கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

0
148

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார்.

இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவரது கண்ணம்மா கேரக்டருக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரில் அதிகம் படிக்காத கண்ணம்மாவை பாரதி காதலித்து, திருமணம் செய்து கொண்டார். ஆனால், பாரதியின் அம்மாவுக்கு அவரை பிடிக்கவில்லை.

இருந்தாலும் பாரதி கண்ணம்மாவுக்கு சப்போர்ட்டாக இருந்தார். ஆனால், பாரதியின் தோழி வெண்பா பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்கும் எண்ணத்துடன் பல சதி வேலைகளை செய்து வந்தார். கடைசியில் கண்ணம்மாவை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்.

அதுவும் நடக்கவில்லை என்பதால், பாரதியிடம் கண்ணம்மாவை தவறாக கூறி இறுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தினார். அந்த காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர். பின் இந்த சீரியலில், இரு குழந்தைகளுக்கு தாயாக ரோஷினி அவர்கள் நடிக்கிறார். ஒரு குழந்தை பாரதியுடனும் மற்றும் இன்னொரு குழந்தையை கண்ணம்மாவுடனும் வளர்ந்து வருகிறது. 

இது இரண்டுமே அவர்களது குழந்தைகள் தான் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கின்றது. தற்போது சமூக வலைதள பக்கங்களில் கண்ணம்மா மிகவும் ஆக்டிவாக புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.அந்த விதத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவைக் கண்ட ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.