Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாறுமாறான சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்.. உச்சகட்ட குஷியில் படக்குழு!

 

தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மாரி 2. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்திருப்பார்.

இந்த படத்தின் எல்லா பாடல்களும் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

மேலும் இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார் என்பதும், இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி பேபி பாடல் புதியதாக ஒரு சாதனை படைத்து படக்குழுவினரை குஷி  படுத்தியுள்ளது.

அதாவது மாரி 2 படம் வெளியாகி சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூபில் வெளியிட்டனர் படக்குழுவினர்.

இணையத்தில் வைரலான இந்தப் பாடல் சர்வதேச பில்போர்ட் இசை பட்டியலிலும் இடம் பெற்றது.

தற்போது இந்த பாடல் யூடியூபில் ஒரு பில்லியன் அதாவது 100 கோடி முறை  பார்க்க பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

மேலும் தென்னிந்திய திரையுலகில் ஒரு சினிமாபடல் ஒரு பில்லியன் சாதனை படைப்பது இதுவே முதன் முறையாகும்.

எனவே இப்படிப்பட்ட சாதனையை படைத்த படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 

Exit mobile version