Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

ஆறு பேர் சேர்ந்த ரவுடி கும்பல் பெண்ணையும்,அவளது மகளையும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் ஷாஹ்பூர் பகுதியில் கல் உடைக்கும் குடும்பத்தினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே பிழைப்புக்காக இங்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

பகலில் கல் உடைத்து விட்டு அங்கிருந்த முகாமில் இரவில் தங்கி வந்துள்ளனர். ரவுடிகள் இதனை பல நாட்களாகக் கவனித்து வந்துள்ளனர்.

திடீரென அங்கு வந்த ரவுடிகள் அவரது கணவனை கட்டிப்போட்டுவிட்டு,40 வயது பெண்ணையும், 15 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி விட்டு தப்பிச் சென்று இருக்கின்றனர்.

 

ரவுடிகள் சென்ற பின் அக்கம் பக்கத்தில் இருந்தோர் கணவனின் கையிலிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு மூவரையும் காப்பாற்றியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இதைக்குறித்து ரவுடிகள் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் காவலர்கள் அந்தப் பெண்ணையும் சிறுமையையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என இச்சம்பவம் அடித்துக் கூறுகிறது.

Exit mobile version