Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

#image_title

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

நம் அனைவருக்கு முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அஇருக்கும். இதற்கு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் போதும். நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கஞ்சி தண்ணீர் – 1 கப்

*அரிசி மாவு – 2 தேக்கரண்டி

*பால் – 1/2 டம்ளர்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஆறிய பிறகு 1 கப் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை அடுப்பில் வைத்து 1/2 டம்ளர் பால் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

அரிசி மாவு 2 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு ஒரு ஏர் டைட் டப்பாவில் ஊற்றி இவற்றை 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

செய்து வைத்துள்ள கலவையில் 2 தேக்கரண்டி எடுத்து ஒரு பவுலில் போட்டு கொள்ள வேண்டும்.
இந்த க்ரீமை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் சரும சுருக்கம், முகத்தில் படிந்துள்ள அழுக்கு போன்றவை நீங்கி முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.

Exit mobile version