Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் – அதிரவைத்த முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

OPS EPS ADMK

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை இணக்கத் திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கினார்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் அதிமுக இயங்கி வந்த நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவினர் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தனர்.

தன்னை கட்சியிலிருந்து நீக்கதை எதிர்த்து சட்டப் போராட்டம் மற்றும் மக்கள் முன்னிலையில் நியாயம் கேட்டு பேரணி என்று ஓ பன்னீர்செல்வம் ஒரு பக்கம் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

#image_title

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவிக்கையில், ஓ பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி தான் சென்றது. அதிமுகவில் பிளவு ஏற்படுவதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஓ பன்னீர்செல்வம் தான். அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் அதிமுகவை பிரிக்க சதித் திட்டம் தீட்டினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரின் மகன் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றிதான். அது ஓ பன்னீர்செல்வத்தின் வெற்றி கிடையாது. ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைத்து ஒரு விஷப்பரீச்சையை செய்ய அதிமுக தயாராக இல்லை.

இதை நான் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு தான் தெரிவிக்கிறேன். இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக தற்போது நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வத்தை எந்த வகையிலும் நாங்கள் ஏற்க முடியாது” என்று ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version