Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் ரிலீஸ் ஆகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

பாகுபலி இரண்டு பாகங்களின்  வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பலநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இந்த படம்  பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி 11 வாரங்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் அப்படி நடந்ததில்லை. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த படத்தை வெகுவாக ரசித்தார்கள். இந்நிலையில் இப்போது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்கு இந்த படம் போட்டியிடுகிறது.

இதையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை ஜாப்பனீஸ் மொழியில் டப் செய்து ஜப்பானில் கடந்த வாரம் ரிலீஸ் செய்தனர். இதற்காக இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஜப்பானுக்கு ப்ரமோஷனுக்காக சென்றனர்.

இந்நிலையில் முதல் வார வசூலில் ஆர் ஆர் ஆர் படம் அங்கு சாதனை படைத்துள்ளது. முதல் வார முடிவில் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ஜப்பானில் வெளியாகி வெற்றி பெற்ற இந்திய படங்களில் ஆர் ஆர் ஆர் படத்தின் தொடக்க வார கலெக்‌ஷனே அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version