ரூ 1 லட்சம்.. மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வரும் உதவித்தொகை!! தமிழக அரசு கொடுத்த அலர்ட்!!

0
178
11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

Tamilnadu Gov: தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உதவித்தொகை பெற்றுத் தருவதாக வங்கி கணக்கின் தகவல்களை சேகரித்து வாங்கி மோசடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பாக கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது. இருப்பினும் நாம் அதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு நமக்கு நல்லது இருக்கின்றதோ அதே அளவுக்கு நாம் ஏமாறும் சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கின்றது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து மோசடி கும்பலும் தங்களை நாளுக்கு நாள் அப்டேட் செய்து கொண்டு நம்மை ஏமாற்றி நம்மிடம் இருந்து பணத்தை பறித்து வருகின்றனர். வங்கியில் இருந்து கணக்கு சரிபார்க்க அழைக்கிறோம் என்று மோசடி செய்ய தொடங்கிய கும்பல் தற்பொழுது உணவு டெலிவரி மோசடி, கிப்ட் கார்ட் மோசடி என்று பல வகையான மோசடிகளை புதிது புதிதாக கண்டுபிடித்து அப்பாவி மக்களின் பணத்தை பறித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு கும்பல் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை குறிவைத்து உதவித் தொகை, ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மோசடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை பெறுவதற்கு வங்கி கணக்கானது பள்ளிகளில் தொடங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பெற்றோரின் ஆதார் எண், மாணவர்களின் ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றை பெற்றவர்கள் பள்ளிகளில் வழங்கி வருகின்றனர்.

ஆசிரியர்கள் இதை வைத்து மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி அரசு வழங்கும் உதவித்தொகை அந்த வங்கி கணக்கிற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தற்பொழுது மும்முரமாக நடந்து வருகின்றது. இதையடுத்து இந்த உதவித் தொகையை மையமாக வைத்தும் மோசடி செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் கிளம்பியுள்ளது.

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதவித் தொகைக்காக காத்திருக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட கும்பல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் உங்கள் மகனுக்கு 28500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட இருப்பதால் உங்களுடைய வங்கிக் கணக்கை சரிபார்க்க வேண்டும் என்றும் அந்த மோசடி கும்பல் கூறியுள்ளது.

இதையடுத்து பெற்றோர் எங்களுடைய வங்கி கணக்கு எல்லாம் சரியாக இருப்பதாகவும் தினமும் வங்கிக் கணக்கில் பணம் போட்டு எடுப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த மோசடி கும்பல் உங்கள் கணக்கில் 4000 ரூபாய்க்கு கீழ் இருந்தால் தான் உதவித் தொகையை நாங்கள் கிரெடிட் செய்வோம் என்றும் இல்லையென்றால் உதவித் தொகை கிடைக்காது என்றும் கூறியுள்ளது.

பின்னர் அந்த பெற்றோரிடம் மோசடி கும்பல் “உங்கள் வங்கிக் கணக்கில் 10000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றது. இதை வேறு ஒரு வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும் கூற அந்த பெற்றோரும் வெள்ளந்தியாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி, செல்போன் எண் என அனைத்து தகவல்களையும் கொடுக்க அந்த மோசடி கும்பல் பெற்றோரிடம் இருந்து அனைத்து பணத்தையும் திருடி உள்ளது.

இந்த சம்பவம் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இதே போல அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை இதே பாணியில் இந்த மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது முதன்மை கல்வி அலுவலர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் “திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றேர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு. கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கு உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்டறிந்து அதன்மூலமாக பணம் மோசடி நடைபெற்று வருகின்றது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் காலையில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த தகவலை அனுப்ப வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.