100 ரூபாய் நோட்டுகள் சந்தைகளில் அதிக அளவு புலக்கத்தில் உள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கியை தெரிவிக்கிறது. இதன் மூலம் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.
2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக RBI தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியன் ரிசர்வ் வங்கி சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
போலி ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண RBI அளித்துள்ள முக்கிய தகவல்கள் :-
✓ வாட்டர்மார்க், பாதுகாப்பு நூல் மற்றும் நிற மாற்ற மை போன்றவை உண்மையான ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.
✓ உண்மையான ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்கிற்கு அருகில் செங்குத்து பட்டையில் மலர் வடிவமைப்பும், வாட்டர்மார்க் பகுதியில் “100” என்ற எண்ணுடன் மகாத்மா காந்தியின் ஒளி உருவம் இருப்பதையும் நம்மால் காண முடியும்.
✓ செங்குத்துப்பட்டை மற்றும் மகாத்மா காந்தி படத்திற்கு இடையே RBI, 100 என்பது தெரியும்.
✓ 100 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்தியா மற்றும் RBI என்ற சொற்கள் வெவ்வேறு கோணங்களில் வைத்து பார்க்கும் பொழுது முறையே நீலம் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.
இது போன்ற முறைகளை வைத்து 100 ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகளா அல்லது கள்ள நோட்டுகளா என்பதை கண்டறிய முடியும் என இந்தியன் ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.