மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
திமுக அரசானது பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் ஆட்சியை பிடித்தது.ஆட்சி அமர்தியது முதல் பல சிறப்பம்சங்களை மக்களுக்காக நடைமுறை படுத்தியது.பால் விலை குறைப்பு,மகளிருக்கு இலவச பேருந்து என அடுத்தடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சலுகைகளை அமல்படுத்தினர்.தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.அதனையடுத்து அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களுக்கு மானியம் ஒதுக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டுகள் கடந்து விட்டது.முதல்வராக ஓராண்டுகள் கடந்த நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் 1முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என கூறினார்.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சிற்றுண்டி வழங்கும் முறை முதலில் தொலைதூர கிராமங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.மேலும் மாநகராட்சியில் இருக்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
நாளடைவில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என கூறினார்.அதே போல ஊட்டச்சத்து குறைப்பாடு அகற்ற 6வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.மேலும் டெல்லியில் உள்ளதை போல தமிழகத்திலும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என கூறியுள்ளனர். இனி நகர்ப்புறங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை போல நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் முதலமைச்சர் திட்டம் வழியாக கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் மக்களுக்கு தேவையான 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு கூறும் பத்து திட்டங்களுக்கு ரூ 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தேவைகளை குறித்து சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரும் இணைந்த நிறைவேற்றித் தருவார் என்று தெரிவித்தார்.