ஆதார் மற்றும் பார்ன் என்னை இணைக்க தவறி விட்டீர்களா? அபராதம் செலுத்துவது எப்படி?

0
200

நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் அட்டையை நிச்சயமாக இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக மார்ச் மாதம் 31ஆம் தேதி இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் வசதிக்காக ஆதார் மற்றும் பான் உள்ளிட்டவற்றை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இருந்த போதும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஏதாவது 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரைவிலான காலகட்டத்தில் ஆதார் கார்டை இணைப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், இந்த அபராத கட்டணத்தை தற்போது உயர்த்துவதாக அரசு அறிவித்திருந்தது.

இதன்படி தற்போது அரசு விதித்திருக்கின்ற அபராத தொகை 1000 ஆக அதிகரித்திருக்கிறது. ஆகவே அந்த 1000 ரூபாய் கட்டி தாங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை வருகின்ற 2023 மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயல் இழக்க நேரிடலாம் மற்றும் வருமானவரிச் சட்டம் 1961 கீழ் அனைத்து விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்று அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது.

அதோடு உங்களுடைய செயலிழந்து விட்டால் மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீங்கள் எந்தவித நிதி பரிவர்த்தனைகளையும் உங்களால் முன்னெடுக்க இயலாது. அதோடு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், வங்கி கணக்குகளை தொடங்குதல் மற்றும் முதலீடுகள் மேற்கொள்வது, வருமான வரி ரிட்டன்களை பெற இயலாதது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சேர்ந்து சந்திக்க நேரிடலாம் என தெரிகிறது. ஆகவே இதுவரையில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்சமயம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பிற்கு அரசு வைத்திருக்கின்ற அபராத தொகையை எப்படி செலுத்த வேண்டும் என இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் onlineservises.tin.egov.nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு ஆதார் கார்டு மற்றும் ஆண் இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண் ITNS280ன் கீழ் தொடர்வதும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பொருந்தக்கூடிய வரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பின்னர் மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 உள்ளிட்டின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

எதன் மூலமாக பணம் செலுத்துகிறீர்கள்? அதாவது நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக தான் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து பான் எண்ணை உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுத்து விட்டு முகவரியை பதிவு செய்துவிட்டு கடைசியாக சரியாக கேப்ஷனை தொடர்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும் தற்போது உங்களுடைய அபராத தொகையை நீங்கள் எளிய முறையில் இணையதளத்தின் மூலமாக செலுத்திக் கொள்ளலாம்.