குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

0
277
rs-1000-per-month-for-heads-of-families-the-announcement-made-by-minister-udayanidhi

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லா  பயணச்சீட்டு, குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம்ரூபாய், நான் முதல்வன் திட்டம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தியது.

ஆனால் தற்போது வரை குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்  வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அதனால் இந்த அறிவிப்பு முற்றிலும் பொய்யானது என எதிர் காட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இது குறித்து தகவல்  விரைவில் வெளியாகும் என முதல்வர் மு க ஸ்டாலின் அவ்வப்போது கூறி வந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வரும் 2௦ ஆம்  தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி, நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள்,கைம் பெண்கள், அந்தியோதயா அன்னை யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் அதிமுகவினர் மக்களை சந்திப்பதாகவும் தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவினர் மக்களை சந்திப்பதாகவும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

அப்போது குடும்ப தலைவிகளுக்கு  உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் குறித்து கூறிய அறிவிப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் எனவும் உறுதியளித்துள்ளார்.