Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1000!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

rs-1000-per-month-for-these-9th-class-students-sudden-announcement-by-tamil-nadu-government

rs-1000-per-month-for-these-9th-class-students-sudden-announcement-by-tamil-nadu-government

Scholarship: ஊராக திறானாய்வு தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி என பலவற்றை வழங்கி வருகிறது. குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ஆயிரம் ரூபாயும் கொடுக்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த தேர்வானது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் குறிப்பாக சென்னையை அடுத்த பிற மாவட்டத்தில் ஊரக பள்ளிகளில் மட்டுமே நடக்கும். இந்த தேர்வுக்கு மாவட்டம் தோறும் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மூலம் தேர்ச்சியடையும் முதல்  50 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது படித்து முடிக்கும் நான்கு வருடங்களுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு வழி செய்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் இந்த தேர்வு குறித்தான அறிவிப்பை தான் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் வருமானமாது 1 லட்சத்திற்கு கீழாக இருக்க வேண்டும். இதுகுறித்த வருமான சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

இந்த தேர்வானது அடுத்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திறனாய்வு தேர்தவில் அதிக மதிப்பெண் பெரும் முதல் 50 மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படுவது உறுதி.

Exit mobile version