Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம்! இன்று முதல் ஏப்ரல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

Rs 1000 per month scheme! You can apply from today till 31st April!

Rs 1000 per month scheme! You can apply from today till 31st April!

மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம்! இன்று முதல் ஏப்ரல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் கடந்த தேர்தல் நடைபெற்ற போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், குடும்பத் தலைவிகளுக்கு  ரூ 1000, நான் முதல்வன் திட்டம் என அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு, நான் முதல்வன் திட்டம் என ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தியது இருப்பினும் குடும்ப தலைவருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் நடப்ப ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் முக்கிய மந்திரி லட்லி  பெஹனா யோஜனா எனும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி செலுத்துவார்கள் மற்றும் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும்.

மேலும் இதற்கு இந்த மாதம் 15 ஆம் தேதியில்லிருந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 31ஆம் தேதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து  ஜூன் 10ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ஆயிரம் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version