இந்த வருடத்தில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டசபையில் நேற்றையதினம் தெரிவித்திருக்கின்றார்.
சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான விவாதம் நேற்றைய தினம் நடந்தது அந்த சமயத்தில் சென்ற பத்து வருட காலகட்டத்தில் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 640 கோடி வரையில் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுகவின் ஆட்சி காலத்தில் 10 மத்திய கூட்டுறவு வங்கிகளை தவிர்த்து 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. அதோடு 475 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத்தில் இருந்தன என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் இருபத்திமூன்று வங்கிகள் மட்டுமல்லாமல் 3900 அதிகமான சங்கங்கள் லாபத்தில் இயங்கின என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் பெரியசாமி அதிமுக ஆட்சி காலத்தில் 9.5 முதல் 10 சதவீதம் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் 15 முதல் 16 சதவீதம் வரையில் வழங்கப்பட்டது .இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து வருடங்களில் 25 சதவீதமாக உயர்த்த இருக்கின்றோம். இந்த வருடத்தில் ஆயிரத்து 500 கோடி பயிர் கடன் வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்திருந்தார் அமைச்சர் பெரியசாமி.