மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 மூன்று கேஸ் ப்ரீ – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் பதவிக்காலம் முடிந்து வருகின்ற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.2022 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஏக்நாத ஷிண்டே தலைமையில் பாஜக+கூட்டணி ஆட்சியமைந்தது.இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் பல இலவச அறிவிப்புகளை அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறது.மக்களின் வாக்குகளை பெற
துணை முதல்வரான அஜித் பவார் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வருகின்ற ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் என்றும் இந்த பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்த சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.
1)பெண்களை கவரும் வகையில் 21 முதல் 60 வயது வரை உள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.
2)சுமார் 44 லட்சம் விவசாய்களின் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
3)5 நபர்கள் உள்ளடக்கிய குடும்பத்திற்கு ஆண்டிற்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
4)மும்பை பெருநகர் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும்.இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.60 வரை குறையும்.இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மாநில அரசின் இந்த அறிவிப்புகள் மக்களை கவரும் வகையில் உள்ள நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை பாஜக+கூட்டணி கட்சிகள் இப்பொழுதே நடைமுறைப்படுத்தி வாக்குகளை பெற முயற்சிப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.