மகளிருக்கு ரூ 1500 உதவித்தொகை.. இளைஞர்களுக்கு 3000!! வெளிவந்த புதிய தகவல்!!
நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது வரும் 13-ஆம் தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு ஒரு படி அதிகமாகவே தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மேலிடத்தில் உள்ள பல தலைவர்கள் ஆந்திராவில் தான் தற்பொழுது குடிகொண்டு உள்ளனர் என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. நேற்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமை திட்டத்தைப் போலவே அங்குள்ள பெண்களுக்கு மாதம்தோறும் 1500 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் மாதம் 3000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கட்டாயம் இந்த வாக்குறுதி அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல நலத்திட்டங்கள் ஆந்திராவிலும் தங்களது அறிக்கையில் சேர்த்துள்ளனர். இந்த உதவி தொகை மட்டுமின்றி கட்டணமில்லா பேருந்து, மகளிருக்கு ஆண்டுக்கு மூன்று விலையில்லா எரிவாயு போன்றவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மகளிரை கவரும் வகையில் அதிகளவு வாக்குறுதிகளை பாஜக கூட்டணி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு 15,000 வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அறிக்கை தான் தற்பொழுது ஆந்திராவில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகத்தில் உள்ள பல நலத்திட்டங்கள் தற்பொழுது ஆந்திராவில் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.