Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 2000! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Rs 2000 in farmers bank account from today! Super update released by the government!

Rs 2000 in farmers bank account from today! Super update released by the government!

இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 2000! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த நல திட்டத்தின் மூலமாக மக்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணை வாயிலாக 6000 ரூபாய் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த பணமானது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது.

ஓராண்டுக்கு முதல் தவணை ஏப்ரல் 1 தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலும், மூன்றாவது தவணை  டிசம்பர் 1 தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது வரை 12  தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தவணை எந்த தேதியில் விவசாயியின் வங்கி கணக்கிற்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் பிஎம் கிசான் திட்டத்தின் 13 வது தவணை 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் இன்று தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் உரையாடுவார். பங்கேற்க விரும்புவர்கள் இணையதளத்தில் மூலம் பதிவு செய்ய வேண்டும் என முன்னதாகவே அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version