பொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்!

0
282
#image_title

பொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்!

ஆண்டுதோறும் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு அல்லது ரொக்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கத்திற்கு பதிலாக பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் வெல்லம், ஏலக்காய், பச்சரிசி உள்ளிட்ட 21 பொருட்களை வழங்கியது.

கொடுக்கப்பட்ட அனைத்தும் கலப்படம் கலந்த பொருட்களாக இருந்ததால் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். எந்த ஒரு பொருளிலும் தயாரிக்கப்பட்ட தேதி, நிறுவனதின் பெயர் என்று எதுவும் குறிப்பிடாமல் இருந்ததால் பெரும்பாலான மக்கள் அந்த பொருட்களை பயன்படுத்தவே தயங்கினர்.

பல்வேறு தரப்பு விமர்சனங்களால் அடி வாங்கிய திமுக கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கமாக வழங்கியது.

இந்நிலையில் வரவுள்ள பொங்கலுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்குமா? இல்லை ரொக்கம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகம் நிலவி வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.

அதன் பின்னர் ரூ.1000 பொங்கல் தொகுப்புடன் மகளிர் உரிமைத் தொகை ரூ1000 என்று மொத்தம் ரூ.2000 தமிழக அரசு ஒரே நேரத்தில் வழங்கும் என்று தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.

ஆனால் விலைவாசி உயர்வால் தமிழக அரசு ரூ.1000 வழங்கினால் ஏழை, எளிய மக்களுக்கு அவை பொங்கல் பண்டிகையை கொண்டாட போதுமானதாக இருக்காது என்பதினால்
பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2000 பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

ஒருவேளை தமிழக அரசு ரூ.2000 பொங்கல் பரிசாக ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தால் மகளிர் உரிமைத் தொகையோடு மொத்தம் ரூ.3000 பொதுமக்களுக்கு கிடைக்கும். இதனால் தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.