வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட்  நியூஸ்!

0
249
Rs 2500 monthly allowance for unemployed youth! Good news released by the government!

வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட்  நியூஸ்!

சத்தீஸ்கர் சட்ட மன்றத்தில் நேற்று 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் இதுவாகும்.

2023 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ 2500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள், வீட்டு காவலர்கள், கிராம கோட்டவர்கள், மற்றும் பிறரின் மாதாந்திர கௌரவ ஊதியத்தை உயர்த்துவதாகவும் கூறியுள்ளார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் முறையே 6500 இல் இருந்து ரூ.10,000 ஆகவும், ரூ 3650-ல் இருந்து 5000 ஆகவும் உயர்த்தப்படும். மினி அங்கன்வாடி பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 4500 ரூபாய்க்கு பதிலாக 7500 வழங்கப்படும் என தெரிவித்தார்.

கோட்வாரா கிராம மக்களுக்கு அவர்கள் பணியாற்றும் பகுதியில் அளவை பொறுத்து கௌரவ ஊதியம் வழங்கப்படும் என கூறினார். ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் 700 படுகைகள் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடத்தை மேம்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் நடமாடும் மருத்துவ பிரிவு நிறுவனத்திற்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.