3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

0
90
Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகள் இன்றி வீட்டினுள் உள்ளனர்.சிலர் அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை வைத்துதான் தினசரி வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.அதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் உடைய தளர்வுகளை ஏற்படுத்தியது.இந்த தளர்வுகள் அமல்படுத்திய நாள் முதல் ஒரு சில மக்கள் அவற்றின் தாக்கம் அறியாமல் நடந்து கொள்கின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது.தற்போது கருணாவின் மூன்றாவது அறை உருவாகி வருகிறது என்றும் மருத்துவர்கள் அன்றாடம் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் பல பண்டிகைகள் மாதந்தோறும் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வர உள்ளது.முஸ்லிம் பண்டிகை என்று கூறினாலே அனைவரின் நினைவில் வருவது பிரியாணிதான்.அதனால் அடுத்த வாரம் வரும் பண்டிகைக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு தேவையான ஆடு மற்றும் கோழிகளை இந்த வாரமே வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரசந்தை ஆடு விற்பனைக்கு மிகவும் புகழ்பெற்றது.

இந்த சந்தையில் அதிகபட்சமாக 25 லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை நடைபெறும். அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் இன்று அதிகாலை மட்டும் மூன்று மணி நேரத்திலேயே இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.தினசரி வார சந்தையை விட தற்போது பண்டிகை காலம் என்பதால் இந்த வார சந்தை மிகவும் கோலாகலமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை வாரச் சந்தைக்கு வந்து 8000 முதல் 15,000 வரை ஆடுகளை வாங்கி சென்றனர்.