2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கான காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுது தற்பொழுது உள்ள முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்ட பொழுது, அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதனை சுட்டிக்காட்டி தான் தற்பொழுது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் 30 ஆயிரம் வழங்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று கருதி அதனையே முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்திருப்பதாவது :-
எங்களுடைய ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதை வைத்து பார்த்தால், இப்பொழுதுள்ள மதிப்பிற்கு அவர் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆகவே தமிழக அரசனது இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் செல்லூர் ராஜு அவர்கள்.