9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?
அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி பயில பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் கல்வித்திறன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக மத்திய அரசின் நிதி பங்களிப்பின் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் இந்த ஊக்கத்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கபடுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி:
1)அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மட்டும் விண்ணப்பம் செய்ய முடியும்.
2)பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3)வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் மாணவிகள் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு இருக்க வேண்டும்.
4)வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
5)திட்டத்தில் பயன்பெற சாதிச்சான்று நகல், வருமானச் சான்று நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல் ஆகியவற்றை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.4000 செலுத்தப்பட்டுவிடும்.