ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!
ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தலானது மார்ச் மாதம் நடைபெற உள்ளது.திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு அவருடைய சொந்த மாவட்டமே ஈரோடு என்பதால் அவர் அங்கு முகாமிட்டு மேற்கொண்டு கட்சி சம்மந்தமான அனைத்து பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் காங்கிரஸ் உடன் திமுக இணைந்து வேலைகளை செய்து வரும் பட்சத்தில் மநீம கட்சி கமல்ஹாசனும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எனவே காங்கிரசிற்கு பல கட்சிகளின் ஆதரவு இருப்பது வெற்றியை சூடி தரும்.
அந்த வகையில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் மகன் சஞ்சய் சம்பத் திமுக அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவ்வாறு வாக்கு சேகரிப்பு முடிந்ததும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பல சலுகைகளை மக்களுக்கு செய்வதாக தெரிவித்து வாக்குகளை சேகரிக்க காயை நகர்த்தியுள்ளார்.
அவ்வாறு அவர் கூறியதாவது, தற்பொழுது இளங்கோவன் அவர்கள் சென்னைக்கு சென்றுள்ளார் விரைவில் எங்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார். எங்கள் கட்சி கூட்டணிகளுடன் இணைந்து வலுவாக உள்ளது. எனவே எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்யாது.
ஈரோடு மாநகராட்சியில் பல வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியானது 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இடைத்தேர்தல் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் முடிவடைந்ததும் அந்த நிதியானது வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் மையத்திலேயே சரக்கு குடோன் மற்றும் சரக்கு வாகனங்கள் போன்ற அமைந்திருப்பதால் மக்களுக்கு அதிக அளவு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகுகிறது.எனவே இது குறித்து மேலிடத்தில் பேசி இதற்கான தீர்வு விரைவில் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் நாங்கள் வெற்றி பெற்றால் தீர்வு காண்போம் என அமைச்சர் கூறி வாக்குகளை கவர காயை அடுத்தடுத்து நகர்த்தி வருவது தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.