யாரையோ திருப்தி படுத்த என் மீது கைது நடவடிக்கை என ஆர் எஸ் பாரதி விமர்சனம்

0
137
RS Bharathi-News4 Tamil Online Tamil News

யாரையோ திருப்தி படுத்த என் மீது கைது நடவடிக்கை என ஆர் எஸ் பாரதி தன்னுடைய கைது குறித்து விமர்சித்துள்ளார்

சென்னையில் இன்று காலை திடீரென்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் வசித்து வந்த நிலையில் அவரை வீட்டில் வைத்து அதிகாலையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் காவல் துறையினரின் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் தான் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் சென்னையில் பிப்ரவரி 15 ஆம் தேதி நான் பேசிய கருத்து திரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானது.  

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த கைது விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.