Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய ஆட்சி பணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்: குமாரசாமி

Kumarasamy

இது குறித்து முன்னாள் மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் கூறியதாவது, “நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது”, என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி., “குமாரசாமி தனது பேரக்குழந்தைகளை வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்க்கட்டும். நாங்கள் அவர்களுக்கு பயிற்சி வழங்கி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆக்குகிறோம்” கூறினார். இந்த பதிலுக்கு குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

குமாரசாமியின் விளக்கத்தில் தான் கொரோனா கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு புத்தகங்களை படித்ததாகவும், வரலாற்று அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்ததாகவும், அந்த புத்தகங்களில் கூறியுள்ள சில தகவல்களை தான் நான் இன்று (நேற்று) சொன்னதாகவும் கூறினார்.

மேலும், “நாடு தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும்போது, அந்த கருத்தை கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். நாட்டில் உண்மையாக என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியவில்லை. உண்மையை மூடிமறைத்தால், அது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை அவமதித்தது போன்றது ஆகும். மக்களுக்கு உண்மையை தெரிய வேண்டும். உண்மையை சொல்ல எனக்கு எந்த தயக்கமோ, பயமோ இல்லை. நான் யாருக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இந்த கருத்தை கூறவில்லை. உண்மை பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எப்போதும் உண்மையின் பக்கம் இருக்கிறேன்” என்று முன்னாள் மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

Exit mobile version