இந்த ஜூஸை தலைக்கு தேய்த்தால் வாழ்நாளில் உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது!!
பெண்களை அழகாக காட்டுவதில் அவர்களின் தலைமுடிக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.தலை முடி வலிமையாகவும்,அடர் கருமையாகவும் இருக்கும் பெண்கள் இன்னும் அழகாக காட்சியளிப்பார்கள்.
ஆனால் இன்றுள்ள பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல்.குளியல் அறை,படுக்கை அறையில் அதிகளவு முடி உதிர்ந்து கிடப்பதை கண்டு வருத்தமடையும் பெண்கள் அதிக செலவின்றி தங்கள் முடியை ஆரோக்கியமான முறையில் பராமரித்துக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
1)சின்ன வெங்காயம்
2)வெந்தயம்
ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த வெந்தயப் பொடியில் அரைத்த வெங்காயச் சாற்றை மிக்ஸ் செய்து தலைக்கு தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.வாரத்திற்கு இருமுறை இதை பின்பற்றி வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடி உதிர்தலுக்கு ஒரு பிரபலமான சிறந்த தீர்வாகும். ஏனெனில் இது வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்து, சில மணி நேரம் அல்லது இரவில் விட்டு, பின்னர் கெமிக்கல் இல்லாத ஷாம்பூவுடன் கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெயை தவறாமல் தலைக்கு பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது.
1)கற்றாழை
ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை தண்ணீரில் சுத்தம் செய்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலை முழுவதும் அப்ளை செய்து குளித்தால் தலை முடி உதிர்தல் ஏற்படாமல் இருக்கும்.
1)முட்டையின் வெள்ளைக்கரு
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.முடி உதிர்தல்,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.