Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவின் அசுர வளர்ச்சியால் அலறும் ஆளும் கட்சியினர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது ஆட்சி இருந்துள்ள அதிமுக உற்பத்தி பிரச்சனைகளால் பிளவு பட்டிருப்பதால் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல திமுகவை வலுவாக எதிர்க்க இயலவில்லை.

இப்படியான சூழ்நிலையில் பாஜகவின் செயல்பாடுகள் திமுகவின் அந்த கட்சி ஆதரவாளர்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு அறிக்கையோடு மௌனமாகி விட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட தகவல்களும், எழுப்பிய கேள்விகளையும் திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினர்.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே என் நேரு பேசியதாவது எதிர்க்கட்சியான அதிமுக பிளவு பட்டிருக்கிறது. அதிமுகவின் இடத்தை பிடிக்கும் நோக்கத்தோடு அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக தடுத்து வருகிறது. ஆகவே பாஜக வளரும் நிலை உண்டாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் அதன் பிறகு சட்டசபை தேர்தலில் பார்க்கலாம் என்று பாஜகவினர் சவால் விடுகின்ற நிலை தற்போது வந்திருக்கிறது.

பாஜகவினர் ஒவ்வொரு கிராமங்களில் 20 பேர் கொண்ட ஓட்டு சாவடி கமிட்டிகளை அமைத்து வருகிறார்கள். எந்த இடத்தில் காலொன்றுகிறது எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை கவனித்து திமுகவின் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இனிவரும் காலம் மிக மிக கவனமாக பணிபுரிய வேண்டிய காலம்.

இவ்வாறு அவர் பேசினார் தேர்தல் களப்பணியில் வல்லவரான நேரு ஒவ்வொரு கிராமத்திலும் பாஜகவின் ஓட்டு சாவடி கமிட்டிகளை அமைத்து வருகிறது என்று தெரிவித்ததை எளிதாக யாராலும் ஒதுக்கி தள்ள முடியாது.

அவருடைய பயம் நியாயமானது தான் என்று திமுகவினர் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களுக்குள் விவாதம் செய்து வருகிறார்கள்.

பாஜகவினர் தயிர் சாதத்தை கட்டி வந்து கொள்கைக்காக வேலை செய்கிறார்கள். நாம் பிரியாணி, பணம், பாட்டில் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி சமீபத்தில் தொண்டர்கள் கூட்டத்தில் பேசி வேதனைப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்ததாவது நேருவின் பேச்சும், அழகிரியின் வேதனையும் பாஜகவின் வளர்ச்சியால் எந்த அளவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கலக்கமடைந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே பாஜகவை இழுத்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கிறது. அதிமுகவின் இடத்தை பாஜக பிடித்து விடும் என்று மீண்டும், மீண்டும் திமுகவினரும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் பேசுவதின் பின்னணி இதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version