“தீயாக பரவிய வதந்தி!! ஆத்திரமடைந்து எச்சரித்த சாய் பல்லவி!!”

0
101
"Rumour spread like wildfire!! Angry and warned Sai Pallavi!!"

சாய்பல்லவி நடித்த ‘அமரன் படம் வெற்றியை’ தொடர்ந்து அடுத்ததாக அவர் “ஹிந்தியில் வெளியாகும் ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்’. இப்படமானது 2026 தீபாவளி சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இவருடன் இணைந்து ‘ரன்பீர் கபூர்,யாஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்’.

இந்நிலையில் சமீப காலமாகவே சாய் பல்லவி குறித்து ஒரு வதந்தியும் வலைத்தளங்களில் பரவி வருகிறது. சாய் பல்லவி ‘ராமாயணம் திரைப்படத்தில் சீதை கேரக்டர் நடிப்பதற்காக படம் முடியும் வரை அசைவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என முடிவு செய்துள்ளதாகவும், அதனால் ‘சூட்டிங் ஸ்பாட்டிற்கு தன்னுடன் இரண்டு சமையல்காரர்களை அழைத்து செல்வதாகவும்’ வதந்தி தீயாகப் பரவி வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த சாய் பல்லவி அவரது X வலைதளத்தில் கூறியதாவது, ‘இதுவரை என்னைக் குறித்து வதந்திகள் கிளம்பும்போது, என்னைப் பற்றி கடவுளுக்கு தெரியும் என அமைதியாக இருந்தேன்’. ஆனால் “இது போன்ற செயல்கள் தொடர்ந்து வருவதனால், இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது” என முடிவு செய்துள்ளேன்.

“என்னைப் பற்றி ஆதாரம் அற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை இனியும் பரப்பினால், பரப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். சாய் பல்லவியின் இந்த பதிவானது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.