Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா.

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 வருடம் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடியே 10 லட்சம் அபராதம் சசிகலாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட காரணத்தால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். சசிகலா தண்டனை காலம் முடிவடைய இருப்பதால் அவரது தொகையினை செலுத்திவிடடால் வரும் ஜனவரி மாதம் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாயை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த அபராதத் தொகையை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கிறார். இதனையடுத்து சசிகலா இந்த மாதம் விடுதலை ஆக இருக்கிறார்.

சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்னாளல் சிறையில் சசிகலாவிற்கு சமையல் அறை, போன்ற சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறியதாக, சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த பெண் அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை தன்னுடைய உயர் அதிகாரி மீது சுமத்தினார். சசிகலா சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வருவதையும் அம்பலம் ஆக்கினார். இதுதொடர்பாக சிறையில் நடக்கும் முறைகேடுகள் என்ன என்று விசாரிப்பதற்கு அப்பொழுது உயர்மட்டக்குழு விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. அது குறித்த வழக்கும் இப்போது நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சிறையிலிருந்து போக்குவரத்து பிரிவிற்கு மாற்றப்பட்டார் ரூபா. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பதவி உயர்வு அடைந்த ரூபா கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் உள்துறை செயலாளர் பதவிக்கு வந்த உடனேயே சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று செய்திகள் உலா வரத் தொடங்கின.

அதேபோலவே சிறையில் மிகச் சுதந்திரமாக இருந்த புகாரில், சசிகலாவின் தண்டனையை நீடிக்கிறது அதே சமயத்தில் நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்ய இயலாது என்று தெரிவித்தார் ரூபா.

இந்த நிலையில், எங்கே சென்றாலும் உயரதிகாரிகளிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கும் ரூபா அந்தக் குற்றங்களை துணிச்சலாக தெரிவிக்கும் ரூபாவிற்கு, புது சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு பாதுகாப்பு திட்டம் டெண்டர் விவகாரத்தில் பெங்களூரு கூடுதல் கமிஷனர் ஹேமந்த் உடனான மோதலில் உள்துறை செயலாளரான ரூபா கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்படுகிறார். இதன்காரணமாக சசிகலாவும் சசிகலா தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

Exit mobile version