Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஷ்யாவை கதறவிடும் நோய் தொற்று பாதிப்பு!

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலுமிருக்கின்றன இதுவரையில் உலகளவில் 40.24 கோடிக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரஷ்யாவில் நோய்த்தொற்று பரவல் மற்றும் புதிய வகை நோய் த்தொற்று பரவலால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை சார்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,53,103 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக அந்த நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்சமயம் 1,33, 30,769 ஆக அதிகரித்திருக்கிறது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 669 பேர் பலியானதால் அங்கே பலியானோரின் எண்ணிக்கை 3,37,390 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.

அந்த நாட்டில் இதுவரையில் நோய் தொற்றிலிருந்து 1,08,03,305 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் தற்சமயம் 21, 90,074 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Exit mobile version