கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!! உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  ரஷ்யா!!

0
651
Russia discovers cure for cancer

Russia: கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று “புற்றுநோய்”. மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட சில நோய்கள் வராமல் இருக்கவும்  அந்த நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கேன்சருக்கு இன்றளவும் சரியான தடுப்பு மருந்துகளும் குணப்படுத்தும் மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை.

உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனைகளை செய்வதை போல் இது போன்ற கொடிய நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  ரஷ்யாவின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாகக் கடைசி கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும்.

விரைவில் தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில் அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார். மேலும், இந்த மருந்துகள் மக்களின் நேரடி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் என கூறி இருக்கிறார்.

இதை போன்ற அமெரிக்காவில் Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கேன்சரில் இருந்து 100 சதவீதம் குணமடைவதற்கான மருந்து கண்டு பிடித்து சோதனையில் வெற்றி பெற்று என்பது குறிப்பிடத்தக்கது.