அவ்ளதான் முடிய போது புதிய ஏவுகணையை இறக்கிய புதின்!! போர் களத்திற்கு தயாராகும் ரஷ்யா!!

0
251
Russia has launched a new missile

Russia: பாலிஸ்டிக் ஏவுகணையை தொடர்ந்து புதிய வகை ஏவுகணையை களமிறக்கிய ரஷ்யா.

ரஷ்யா சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியது அதில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் தற்போது ரஷ்யா தனது மிக பெரிய நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறது.

அதில் குறிப்பாக இந்த ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தனியான இடத்தில் சோதனை செய்வதற்கு பதிலாக போரில் ஒரு பகுதியாக சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த விதமான சோதனைக்கு தங்களிடம் அதிநவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாக ஜனாதிபதியான விளாடிமிர் புதின் கூறினார்.

இதற்கு முன் ரஷ்யாவின் மிகப்பெரிய முக்கிய ஏவுகணைகளில் ஒன்றான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது தாக்கியது. இந்த வகை ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லும் திறன் கொண்டது.  அணு ஆயுதங்களை சுமந்து செல்லாமலும் தாக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில் அடுத்த மிக பெரிய ஆயுதமான ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார் புதின்.மேலும் இந்த ஹைப்பர்சோனிக் ஒலியின் வேகத்தை விட 13 மடங்கு அதிகப்படியான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. நொடிக்கு 1 முதல் 5 மைல் கல் தொலைவு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.  அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம் என இருந்த நிலையில் தற்போது அணுசக்தி இல்லாத நாட்டின் மீதும் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார் புதின்.