ஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா!

0
100

ஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா!

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ளது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதை கேட்காமல் உக்ரைன் மீதான போரை தொடர்ந்து வரும் ரஷியாவின் மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அனால் இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்து வருகிறது.

போரின் காரணமாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் வெளியேற முடியாத சூழல் உள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சிலமணி நேரங்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று ஐந்து நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. கிவ், சுமி, கார்கிவ், மரியு போல், செர்னிஹிவ் ஆகிய ஐந்து நகரங்களில் இந்திய நேரப்படி இன்று காலை 12.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.