அணு ஆயுத போட்டியின் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளதா ரஷ்யா ???

0
113

உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, யாராலும் தடுக்கவே முடியாத அதிபயங்கர அவங்கார்டு ஹைப்பர் சோனிக் அணு ஏவுகணையை ரஷ்யா தனது ராணுவத்தில் இணைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியது  ரஷ்யா. ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், “ உலகில் எந்த நாடும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்தவோ முறியடிக்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் நாங்கள் “தனித்துவமான” முன்னேற்றம் கண்டு உள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன, இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது எனவும், வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கை தாக்கி அழிக்கும், “3M22 ஷிர்கோன் (Tsirkon)” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது மணிக்கு சுமார் 7,000 மைல்களை தாண்டும் “ எனவும் புதின் அறிவித்துள்ளார்.