10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

0
210

10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்கள் மதர் ஹீரோ என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக உருவாகியுள்ள நாட்டின் மக்கள்தொகை நெருக்கடியை மீட்டெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அதன் மூலம் ரஷ்ய பெண்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவும், அவர்களை உயிருடன் வைத்திருக்கவும் ஒரு மில்லியன் ரஷ்யன் ரூபிள்கள் பணமாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்சம் ரூபாய் ஆகும். 10 ஆவது குழந்தை பிறந்து ஒரு வயது நிறைவு பெற்றதும் இந்த பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மூலம் குழந்தைகள் இறந்திருந்தாலும், அந்த குழந்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என சொலல்ப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மதர் ஹீரோயின் என பெயர் வைத்துள்ளனர். இந்த திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. குறிப்பாக பெண்ணியவாதிகள் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னர் ரஷ்யா இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட போது அந்த நாட்டில் மரண விகிதம் அதிகமான போது அப்போதைய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் இந்த ஆணையைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.