அட நீ என்னய்யா சொல்றது அதெல்லாம் முடியாது! சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த ரஷ்யா

0
140

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு உலக நாடுகள் பலவும் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும், தெரிவித்து வருகின்றன, அதிலும் அமெரிக்கா ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்து வருகிறது.அதோடு ஐநா சபையிலும் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது ஆனால் ரஷ்யா தனக்கு இருக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தின் மூலமாக அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.ஆகவே உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவிற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தும், ரஷ்யப் படைகளை உக்ரைனிலிருந்து வெளியேற்ற கோரியும் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது ரஷ்யாவிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்க கூடிய எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

இந்த உத்தரவுகள் 13-2 என்ற வாக்குகளினடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக அதாவது போருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்.

ஆனாலும் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்திருக்கிறது ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த இயலாது என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரண்டு தரப்பிலிருந்தும் ஒப்புதல் தர முடியாது ஆகவே தீர்ப்பு செல்லாது என்று தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர்.

ஆகவே சர்வதேச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளதால் இந்த தீர்ப்பு பயனற்றதாகவே இருக்கிறது. அடுத்ததாக இந்த விஷயத்தை ஐநா சபை தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.