Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!

#image_title

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் ஓராண்டுக்கு மேல் கடந்து தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.இந்த போரால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டது.உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது.

இந்நிலையில் தற்பொழுது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் ஸ்டார்லிங்க் சேவையை செயல்படுத்த உக்ரைன் தரப்பில் இருந்து தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது.ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தி ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்ய வேண்டும் என்பதற்காக தான் தன்னிடம் அவசர கோரிக்கையை உக்ரைன் முன் வைக்கிறது என்பதை உணர்ந்து இணைய வசதியை நான் செயல்படுத்தவில்லை.தமது Starlink சேவையை போரில் ஈடுபடுத்த எனக்கு உடன் பாடில்லை.

ஒருவேளை நான் உக்ரைனின் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால் போரில் மிகப் பெரிய அழிவு நிகழ ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்று எலான் மஸ்க் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்ய உக்ரைனின் சக்தி வாய்ந்த ட்ரோன் தாக்குதலுக்கு தமது Starlink சேவையை பயன்படுத்த மறுத்துள்ள எலான் மஸ்க் அவர்களின் தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Exit mobile version