ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதல் காரணமாக, அந்த நாடு நிலைகுலைந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதும் பின்பு அந்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீட்டெடுப்பதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது..
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தன்னந்தனியாக அந்த நாடு எதிர் கொண்டுவந்தது இதனை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி நாங்கள் தன்னந்தனியாக இந்த போரை எதிர்கொண்டு வரும் எங்களுக்கு உதவுவதற்கு யாருமில்லை என்று பரிதாபமாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 27 நாட்களைக் கடந்து இன்று இருபத்தி 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் அந்த நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ்,மரியுபோல், உள்ளிட்ட நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்கிடையே தீவிர போர் தொடர்ந்து நீடித்து வருகிறது இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தனர்.
இதற்கு நடுவில் இந்தப் போரில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதோடு ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் இந்த நாடுகள் விதித்திருக்கின்றனர் இதனால் போர் நீடித்து வருகிறது.
இந்த போர் 3ம் உலகப் போருக்கு வழிவகை செய்யும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கின்றார். இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்ததுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது அவரிடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களுடைய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியத்துவம் பெற்றது. அனைவரும் பயன்படுத்த படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள் ரஷ்யா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் உண்டாகும் பட்சத்தில் அனு ஆயுதத்தை நாங்கள் நிச்சயம் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.