russia ukraine war:அணு ஆயுதங்களை உக்ரைன் இராணுவத்தினர் மீது பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் அனுமதி.
உக்ரைன் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது போர் தாக்குதலை செய்து வருகிறது ரஷ்யா. உக்ரைன் நாட்டின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருவதால் உக்ரைன் ரஷ்யா எதிராக பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கி 2 வருடங்கள் ஆகின்றன. இது வரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த போர் 1000 ஆயிரம் நாட்களாக நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ராணுவத்தினர் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார்.இதனால் ரஷ்யா நாட்டிற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த முடியும்.மேலும் உக்ரைனும் ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா அதிபர் புதின் அணு ஆயுதங்களை உக்ரைன் மீதான போரில் பயன்படுத்த உடன்படிக்கையில் கையெழுத்து செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்ய மக்கள் அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து பாதிப்பு அடையாமல் இருக்க ரஷ்யா அதிபர் புதின் அணு ஆயுத கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க ஷெல்டர் களை தயார் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது அணு ஆயுத கதிர் வீச்சில் இருந்து மக்களை பாதுகாக்க பூமிக்கடியில் பங்கர்கள் அமைக்கப்படும், அது போன்ற ரஷ்யாவில் உள்ள ஷெல்டர்கள் தயார் செய்ய அனுமதி வழங்கி வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். இதனால் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்ற அபாயகர தகவல் வெளியாகி உள்ளது.