Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்!

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதே போல ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் டீசர் வெளியான போது அதில் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லை. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸுக்கு நெருங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தனுஷுக்கு முன்னுரிமை கொடுத்து ப்ரமோஷன்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இந்த படத்தின் பிரிமீயர் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் கலந்துகொள்ள நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரோடும் சென்றிருந்தார். இதையடுத்து படத்தின் ப்ரமோஷனில் தற்போது படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ரியான் கோஸ்லிங் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனுஷை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் “தனுஷ் மிகச்சிறந்த நம்ப முடியாத அளவுக்கு திறமையான நடிகர். அவருக்கான ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் பலமுறை படமாக்கிய போதும் அவர் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை. அவருக்கு 2 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. அவருக்கு நாங்கள் ரசிகர்களாகிவிட்டோம். அவரை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நினைத்துப்பார்த்து என்னால் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version