நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் “கம்பு முறுக்கு”!! அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!!

0
59
"Rye twist" cures diabetes!! Make it and eat it often!!

நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் “கம்பு முறுக்கு”!! அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!!

சிறுதானிய வகையைச் சேர்ந்த கம்பில் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இதை உணவாக எடுத்து வருவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இந்த கம்பு கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்க பெரிதும் உதவுகிறது.

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கம்பில் லட்டு,கூழ்,சாதம்,தோசை என்று பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.கம்பை உணவில் சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவு நோய்,குடல் புற்று நோய்,இரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.அதேபோல்
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனை,வயிற்று புண்,அல்சர் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

தேவையான பொருட்கள்:-

*கம்பு மாவு – 1 கப்

*அரிசி மாவு – 1/4 கப்

*கடலை மாவு – 1/2 கப்

*வெண்ணெய் – 1 தேக்கரண்டி

*சூடான எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கருப்பு எள் – 1/2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – முறுக்கு பொரிக்க தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 1 கப் கம்பு மாவு,1/2 கப் கடலை மாவு,1/4 கப் அரசி மாவு,வெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி,கருப்பு எள் 1/2 தேக்கரண்டி,தனி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.தயார் செய்யும் மாவனது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து முறுக்கு செய்ய தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் முறுக்கு அச்சு எடுத்து தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவு சிறு உருண்டை போட்டு காய்ந்துள்ள எண்ணெயில் முறுக்கு பிழிந்து கொள்ளவும்.இவை நன்கு வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து வடித்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த முறையில் கம்பு முறுக்கு செய்தால் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.