கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற பாடகரான எஸ்பிபி கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் நேற்று திடீரென எஸ்.பி. பியின் உடல்நிலை மிகவும் மோசமானது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது அந்த மருத்துவமனை. தமிழ் சினிமா தமிழ் திரை உலகின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியன் தற்போது இல்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அவர் குரல் அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் அழிந்தாலும் அவர் பாடல்களுக்கு என்றுமே அழிவு கிடையாது. நியூஸ் 4 தமிழ் ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.