Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் மது அருந்துவதும் போதையில் இருவரும் தவறு செய்வதுமான காட்சிகளும், அதேபோல் சாலையில் வண்டி ரிப்பேர் ஆகி நிற்கும் பெண்ணுக்கு உதவும் ஒரு வாலிபன் அந்தப் பெண்ணை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவதை அடுத்து இருவரும் போதையில் தவறு செய்வதுமான காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில் , பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் இப்படி ஒரு படத்தை எஸ் ஏ சந்திரசேகர் போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனரிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் விஜய்யின் அப்பா இயக்கிய படம் என்பதால் இந்த படத்தை பார்த்து ஏமாந்துதாகவும் விஜய்யின் அப்பாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் ’இதெல்லாம் ஒரு படமா’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன் என்பவர் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் மீது தாராளமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என்றும் இது மாதிரி படத்தை எல்லாம் சென்சார் அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கருத்து கூறியுள்ளார். மொத்தத்தில் கேப்மாரி திரைப்படம் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version